இன்று பிரதோஷம்... சிவன், நந்தீஸ்வரரை வழிபட நல்லதே நடக்கும்!

சிவன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்த தினமே பிரதோஷம்.

இன்று சிவாலயம் சென்று வழிபாடு செய்ய வேண்டியது கிடைக்கும்.

மாலை 4.30 மணி முதல் 6 மணிவரை இறைவழிபாடு செய்வது சிறப்பு.

பிரதோஷத்தன்று சிவபெருமானை வழிபட்டால் எல்லா குற்றங்களும் பாவங்களும் நீங்கி சகல நன்மைகளும் உண்டாகும்.

பிரதோஷ வேளையில் அனைத்து தெய்வங்களும் சிவனை வழிபடுவர். பிரதோஷத்தில் நரசிம்மரை வழிபட கேட்டது உடனே கிடைக்கும்.

இந்நேரத்தில், இஷ்ட தெய்வத்தை நினைத்து கொள்வது நல்லது. இன்று நந்தீஸ்வரருக்கு வில்வ மாலை அணிவித்து வழிபட நினைத்தது நடக்கும்.