இன்று உலக காணாமல் போனோர் தினம்!
ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் மாதம் 30-ம் தேதி சர்வதேச காணாமல் போனோர் தினம் கடைபிடிக்கப்பட்டுவருகிறது.
உலக மகா யுத்தங்களின் போதே அதிகளவிலானோர் காணாமல் போயுள்ளனர்.
குறிப்பாக இரண்டாம் உலக போரின் போது 10 இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போனவர்கள் பலர் பல முயற்சிக்கு பின் குடும்பங்களுடன் ஒன்றிணைவதும் நடந்து வருகிறது.
உலகின் பல நாடுகளிலும் பல்வேறு காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்டு காணாமல் போனவர்கள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ரகசியமான கைதுகளுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள், செஞ்சிலுவைச் சங்கங்கள் போராடி வருகின்றன.
இருந்தாலும் ஏதோ ஒரு காரணத்திற்காக தங்களது சொந்த இடங்களிலிருந்து பல வருடங்களுக்கு முன்னர் காணாமல் போனவர்கள் உங்களை சுற்றியும் தற்போது நடமாடிக்கொண்டு இருக்கலாம்.
இன்றைய தினம் அவர்களை நினைத்து பார்க்கும் நாளாகவும் இருக்கட்டும்.