மழை வந்தாச்சு... இனி உங்க பைக்க பத்திரமா பாத்துகுங்க!
தமிழகத்தில் ஆங்காங்கே மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கும் சூழலில், இருசக்கர வாகனத்தை பராமரிப்பது நமக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.
எனவே, இருசக்கர வாகனங்களை எப்படி கவனமுடன் கையாள வேண்டும் என்பதை பார்ப்போம்...
கோடை காலத்தில் சாலைகள் வறண்டு கிடப்பதால் சாதாரணமாக பிரேக் பிடித்தாலே பைக் நின்றுவிடும். மழைக்காலத்தில் வழுவழுப்பாக இருப்பதால், பிரேக்கில் கூடுதல் கவனம் தேவை.
தேய்ந்த டயர்கள் என்றுமே ஆபத்துதான். அதுவும் மழைக்காலத்தில் அதிக ஆபத்தை ஏற்படுத்தக்கூடும். எனவே உங்கள் டயர்களின் நிலை, காற்றின் அளவை அடிக்கடி பார்த்துக் கொள்ளவும்.
மழைக்காலங்களில் எளிதில் சேறுபடும் என்பதால் அடிக்கடி செயினை சுத்தம் செய்து ஆயில் போடலாம். அப்படி செய்தால் ஸ்மூத் மற்றும் பாதுகாப்பான பயணத்தை கொடுக்கும்.
மழையின் ஈரப்பதம் காரணமாக ஏர் ஃபில்டரில் அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால், இதை பராமரிப்பது மிக முக்கியமானது.
நம் பைக்கை மழையில் நனையவிடாமல் பாதுகாக்க வேண்டும். ஒருவேளை பைக் மழையில் நனையும்படியான இடத்தில் நிறுத்தியிருந்தால் பைக் கவர் மிக முக்கியம்.
மழைநீரில் பைக்கானது தொடர்ந்து நனைந்தால் பெயின்ட் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துரு பிடிக்க வாய்ப்புள்ளது. பைக் ஸ்விட்ச்களில் மழைநீர் புகுந்து ஷார்ட் சர்க்யூட் ஆகி பேட்டரியை பாதிக்கலாம்.