ஹை ஹீல்ஸ் அணிவது சரியா?

ஹீல்ஸ் அணிவது நேரடியாக இடுப்பு, முதுகெலும்பு, முழங்கால்கள் மற்றும் குதிகால் என இடுப்பு கீழே அனைத்து பாகங்களையும் பாதிக்க செய்கிறது.

குறிப்பாக உங்கள் இடுப்பு பாகம், தூக்கி கொண்டு இருப்பது போல் தோற்றம் அளிக்கும். இதனால் உங்கள் உடல் சமநிலையை இழக்கும்.

ஹீல்ஸ் அணிவதால், மூட்டு வலி, குதிங்கால் வலி, பாத வலி என பல வலிகள் உண்டாகும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

நீங்கள் ஹீல்ஸ் அணிந்து மேடு பள்ளங்கள் நிறைந்த சாலையில் நடக்கும் போது கணுக்கால் சுளுக்கு எளிதாக ஏற்படும்.

வேலைக்கு தேவைப்படும் போது மட்டும் அணிந்து விட்டு மற்ற சமயத்தில் அணிய மாற்று காலணிகளை எடுத்து செல்லலாம்.

ஹீல்ஸ் அணியும் போதும் அவ்வபோது அதை அகற்றி வைத்து ரிலாக்ஸ் பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

முடிந்த வரை பாதிப்பு தராமல் இருக்க, 1½ இன்ச் வரை உயரம் அதிகம் இருக்கும் காலணிகளை அணியுங்கள்.