தங்கத்தைப் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ..!
தங்கத்தை சுரங்கத்தில் இருந்து தோண்டி எடுப்பது மிகக் கடினமான வேலை.
தங்கத்தை சுத்திகரித்து எடுத்து அதனை நகையாக மாற்ற பல கட்ட பணியாளர்களின் உழைப்பு தேவைப்படும்.
எளிதில் கம்பிபோல ஆக்க ஏற்றது தங்கம், இதனால் மருத்துவத் துறையில் பயன்படுத்தப்படும் நுண்ணிய உலோகங்களை உருவாக்க உதவுகிறது.
தங்கம் துறு பிடிக்காத உலோகம் என்பதால் இது பாதுகாப்புத் துறை, விமானத் துறை, உள்ளிட்ட பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.
தங்கத்தின் விலை அதிகம் என்பதால் இது உலக நாடுகளின் வர்த்தகத்தில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அதிகமாக தங்கம் வைத்திருக்கும் நாடுகளுக்கு வர்த்தகத்தில் அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
தங்கத்தின் சர்வதேச சந்தை மதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருவதால் தங்கம் ஓர் சிறந்த எதிர்கால முதலீடாகத் திகழ்கிறது.