இன்று சதுர்த்தி விரதம்... விநாயகரை வழிபட வேண்டியது கிடைக்கும் !
விநாயகப் பெருமான் இந்து சமயத்தின் முழு முதற் கடவுள்.
விநாயகரை வழிபட சிறந்த நாள் சதுர்த்தி.
இந்த நாளில் விநாயகரை வழிபட்டால் நினைத்தது நினைத்தபடி நடக்கும்.
விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபட அனைத்தும் கிடைக்கும்.
எல்லா விரதங்களிலும் சதுர்த்தி விரதம் மிகச் சிறந்தது; சங்கடஹரணம் என்றும் இது அழைக்கப் பெறும்.
முதல் முதலில் தன் தாய் பார்வதி தேவிக்குக் கணபதியே இவ்விரதத்தைச் சொல்லி அருளினார்.
அனுமன் சீதையைக் கண்டது, தமயந்தி நளனை அடைந்தது, அகலிகை கௌதமரை அடைந்தது போன்றவை நிகழ்ந்ததும் இவ்விரதத்தின் மகிமையால் தான்.
இன்று ஆனை முகனை வழிபட அனைத்தும் கிடைக்கும்...!