இன்று உலக சுனாமி விழிப்புணர்வு தினம்

உலக சுனாமி விழிப்புணர்வு தினம் (World Tsunami Awareness Day) ஒவ்வொரு ஆண்டும் நவ., 5ல் தேதி அனுசரிக்கப்படுகிறது

சுனாமியை முன்கூட்டியே அறிந்து நடவடிக்கை எடுப்பதில் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட வலியுறுத்தி ஐ.நா., சார்பில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.

'சுனாமிக்கு தயாராக இருங்கள் : அதற்கான முன்னெச்சரிக்கையில் முதலீடு செய்யுங்கள்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

சுனாமி என்பது ஜப்பானிய மொழி சொல். 'துறைமுகஅலை', 'ஆழிப்பேரலை' என அழைக்கப்படுகிறது.

நிலநடுக்கம் கடலில் ஏற்படும் போது சுனாமி உருவாகிறது.

உலகில் 100 ஆண்டுகளில் 58 முறை சுனாமி ஏற்பட்டுள்ளது. இதில் 2.60 லட்சம் பேர் உயிரிழந்தனர்.

சுனாமி குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம், பேரிடரினால் ஏற்படும் பாதிப்புகளையும் உயிர் இழப்புகளையும் பெருமளவில் குறைப்பதே இத்தினத்தின் நோக்கமாகும்.