ஹில்லியர் ஏரியின் இளஞ்சிவப்பு தண்ணீர்... வியக்கவைக்கும் அபூர்வம்!

ஹில்லியர் ஏரி, ஆஸ்திரேலியாவின் தெற்கு கடற்கரையில் உள்ள கோல்ட்ஃபீல்ட்ஸ் எஸ்பெரன்ஸ் பகுதியில் உள்ளது.

பசிபிக் பெருங்கடலுக்கு அருகில் உள்ள இந்த ஏரியின் குறிப்பிடத்தக்க அம்சம் அதன் இளஞ்சிவப்பு நிறம்தான்.

உலகில் உள்ள மற்ற வர்ணங்கள் கலந்த ஏரிகள் வெப்பநிலை மற்றும் காலநிலை மாற்றத்தில் தொடர்ந்து நிறத்தை மாற்றிக் கொள்ளும். ஆனால், இந்த ஏரி ஆண்டு முழுவதும் இளஞ்சிவப்பு நிறத்தில் மட்டுமே காணப்படுகிறது.

ஏரியிலிருந்து நீங்கள் தண்ணீரை பாட்டிலில் பிடித்து பார்த்தாலும் தண்ணீர் இளஞ்சிவப்பு நிறத்தில்தான் இருக்கும். இப்படி இந்த ஏரி இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க காரணம் அதிக உப்புத்தன்மை என விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்த ஏரியில் டுனாலியெல்லா சலினா என்று அழைக்கப்படும் உப்பு பாசி இனங்கள் மற்றும் ஹாலோபாக்டீரியா எனப்படும் இளஞ்சிவப்பு பாக்டீரியாக்கள் சிவப்பு ஆல்கா உள்ளிட்ட நுண்ணுயிரிகள் உள்ளன.

இந்த அழகான காட்சியை முழுமையாக காண ஒரே வழி ஹெலிகாப்டர் மட்டுமே. மேலிருந்து பார்க்கும்போது மட்டுமே அதன் முழுமையான அழகு நமக்கு தெரியும்.