உங்களின் கனவுத்தோட்டத்தில் எலுமிச்சை வளர்ப்பது எப்படி?

எலுமிச்சை விதையை நேர்த்தியாக விதைத்தும் செடி வளர்க்கலாம். அல்லது நர்சரிகளில் வாங்கி வளர்ப்பது எளிதானது. அதற்கேற்ப போதிய அகலமான தொட்டி அவசியமாக இருக்க வேண்டும்.

தோட்டமண், மண்புழு உரம் போன்றவற்றை போதியளவு கலந்து செடி நடவும்.

எலுமிச்சையின் இலைகள் மற்றும் பழங்களின் மென்மையான நறுமணம் ஒருசில பூச்சிகளை ஈர்க்கும் என்பதால், கவனமாகவும், குறிப்பிட்டளவும் மட்டுமே செடிக்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்.

செடி ஆரோக்கியமாக வளர குறைந்தப்பட்சமாக 6 மணி நேரமாவது சூரிய ஒளி கட்டாயமாக கிடைப்பதை உறுதிப்படுத்தவும்.

செடி வளரத் துவங்கும்போது குறிப்பிட்ட இடைவெளிகளில் வேர்களை சேதப்படுத்தாமல், அவ்வப்போது கிளறி விடவும்.

பூக்கள் பூக்கும் போது தேவையான ஊட்டச்சத்து உரத்தை அளிக்க வேண்டும்.

தங்க மொட்டுகளுடன் பூக்கள் பூத்த 2 வாரங்களுக்கு பின், பச்சை நிறத்தில் காய்கள் வரக்கூடும். 45 நாட்களுக்கு பின், பழங்கள் அறுவடைக்கு தயாராகும்.