தமிழ்நாட்டின் அரண்மனைகளுக்கு ஒரு சுற்றுலா போலாமா..!
இந்தியாவின் ஏழு அதிசயங்களுள் ஒன்றாகக் கருதப்படும் செட்டிநாடு அரண்மனை, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகில் கானாடுகாத்தான் கிராமத்தில் உள்ளது. ராஜா அண்ணாமலை செட்டியாரால் இந்த வீடு வடிவமைக்கப்பட்டது.
1844 ல் கட்டப்பட்ட பெர்ன்ஹில்ஸ் பேலஸ் அந்தக் காலங்களில் மைசூர் மகாராஜாவின் கோடைக் கால வசிப்பிடமாக இருந்து வந்தது. ஊட்டியில் அமைந்துள்ள இந்த அரண்மனை தற்போது பசுமையான தேயிலைத் தோட்டங்களுக்கு மத்தியில் அழகாக காட்சியளிக்கிறது.
கம்பீரமான கற்கோட்டை, கணத்த தூண்கள், வியக்கும் கோபுரம், விசாலமான அரசவை என சினிமா மூலம் நாம் அறிந்த அரண்மனைகளுக்கு நேர்ரெதிரானது பத்மநாபபுரம் அரண்மனை.
மதுரையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான திருமலை நாயக்கர் மஹால் கி.பி. 1636 ல், மதுரையை ஆண்ட நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரால் இந்தோ சராசனிக் பாணியில் கட்டப்பட்டிருக்கிறது.
தஞ்சாவூர் அரண்மனையானது தஞ்சையை ஆண்ட நாயக்க மன்னர்களால் கட்டப்பட்டது. அவர்களின் வீழ்ச்சிக்கு பிறகு இந்த அரண்மனை மராட்டியர்களின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.
1670 ல் கட்டப்பட்ட தமுக்கம் அரண்மனை நாயக்க வம்சத்தை சேர்ந்த ராணி மங்கம்மாளின் கோடைக்கால மாளிகையாக பயன்படுத்தப்பட்டது. தமுக்கம் என்றால் கோடைக் காலத்தில் இளைப்பாறும் இடம் என்று பொருள்.