சிவன் கோவில்களும், வித்தியாசமான பிரசாதங்களும் !

கங்கைகொண்ட சோழபுரத்தில், கோரைப்புல் கிழங்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது.

சங்கரன்கோவில், சங்கர நாராயணர் கோவிலில், புற்றுமண் உருண்டை பிரசாதமாக வழங்கப்படுகிறது.

திருக்குற்றாலத்தில், குற்றால நாதர், அம்பாள் இருவருக்கும் சுக்குக் காப்பி நைவேத்யம் செய்து பிரசாதமாக வழங்குகின்றனர்.

காளஹஸ்தியில், பச்சைக் கற்பூரத்தை பன்னீர் கலந்து, சங்கின் மூலம் அந்தத் தீர்த்தத்தை வழங்குகின்றனர். திருநீறு கொடுப்பதில்லை.

திருப்பெருந்துறை, ஆவுடையார் கோவிலில், சிவனுக்கு பாகற்காய் படைக்கப்படுகிறது.

பட்டுக்கோட்டை அருகிலுள்ள பரக்காலக்கோட்டை எனும் ஊரில் உள்ள சிவன் கோவிலில், மருத்துவ குணம் கொண்ட ஆல இலை பிரசாதமாக வழங்கப்படுகிறது.