இன்று உலக இன்டர்நெட் தினம்

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 29-ம் தேதி சர்வதேச இன்டர்நெட் தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2005-ம் ஆண்டு முதல் இந்த தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகில் 556 கோடி பேர் இன்டெர்நெட்' பயன்படுத்துகின்றனர். வயது வித்தியாசமின்றி 'இன்டர்நெட்' பயன்படுத்துகின்றனர்.

இதன் மூலம் இருந்த இடத்தில் இருந்தே பல்வேறு வேலைகளை செய்ய முடிகிறது.

1969 அக். 29ல் கலிபோர்னியா பல்கலை மாணவர் சார்லி கிளைன் ஒரு கம்ப்யூட்டரில் இருந்து மற்றொன்றுக்கு மின்னணு செய்தி அனுப்பினார்.

இதை நினைவு படுத்துதல், இன்டர்நெட்டை பயனுள்ள வகையில் பயன்படுத்த வலியுறுத்தி அக்.29ல் உலக இன்டர்நெட் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

அப்போது இன்டர்நெட்டுக்கு 'அர்பாநெட்' என பெயர்.

அன்று தொடங்கிய இணையத்தின் சேவை பல வகைகளிலும் கிளை விட்டு வளர்ந்து, பல பரிணாமங்களை அடைந்து இன்று, மனிதர்களின் வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது.

இந்தியா, மொபைல் இணைய பதிவிறக்க வேகத்தில் உலக அளவில் முக்கிய இடத்தில் இருக்கிறது. உலகில் 530 கோடி பேர் இன்டெர்நெட்' பயன்படுத்துகின்றனர்.