கரோட்டின் சத்து நிறைந்த கர்நாடகா சிவப்பு நிற பலா... சாகுபடி குறித்த டிப்ஸ் !

கோடை வெயில் மற்றும் மழைக்கு ஏற்ப, குளிர் மற்றும் வறட்சியான பிரதேசங்களில் விளையும், பலவித பழ மரங்களை எளிதாக சாகுபடி செய்யலாம்.

அதன்படி, கர்நாடகா சிவப்பு நிற பலா மரங்களை, நம்மூர் மண்ணில் சாகுபடி செய்யலாம்.

இது, மூன்று ஆண்டுகளில் விளைச்சல் தரக்கூடிய ரகமாகும்.

இந்த பலா செடிகளை, தண்ணீர் தேங்காத மேட்டுப் பகுதிகளில் நட வேண்டும்.

அப்போது தான், செடிகள் சேதமாவதை தவிர்க்கலாம். மரமும் நன்றாக வளரும்.

கண்களுக்கு தேவையான கரோட்டின் சத்து நிறைந்திருப்பதால், இந்த சிவப்பு நிற பலாப்பழத்திற்கு, மார்க்கெட்டில் வரவேற்பு உள்ளது.

குறிப்பாக, களர் உவர் நிலங்கள் மற்றும் தண்ணீர் தேங்காத அனைத்து விதமான நிலங்களில், கர்நாடகா சிவப்பு நிற பலா பழத்தை சாகுபடி செய்யலாம்.

மஞ்சள் நிற பலா பழங்களை காட்டிலும், இதன் வாயிலாக விவசாயிகள் அதிக வருவாய் ஈட்ட முடியும்.