இன்று ஹிரோஷிமா தினம்!
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா நகரம் மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியதன் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.
இரண்டாம் உலகப்போரின் போது ஜப்பானின் ஹிரோஷிமா மீது 1945 ஆகஸ்ட் 6 அன்று அமெரிக்கா அணுகுண்டு வீசியது.
'லிட்டில்பாய்' எனும் 60 கிலோ எடையுள்ள அணுகுண்டை சுமந்து வந்த 'போயிங் பி-29 சூப்பர்போர்ட்ரெஸ்' என்ற அமெரிக்க போர் விமானம், ஹிரோஷிமா மீது உலகின் முதல் அணுகுண்டை வீசியது.
1.5 சதுர கி.மீ., சுற்றளவுக்கு அழிவை ஏற்படுத்தியது. இதில் 1.40 லட்சம் பேர் பலியாகினர்.
கதிர்வீச்சால் ஆயிரக்கணக்கானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர். ஆக., 9ல் நாகசாகி நகரம் மீது அடுத்த அணுகுண்டை வீசியது.
இப்பாதிப்பால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவது பற்றிய கவலை ஒரு பெரிய உலகளாவிய பிரச்னையாக உருவெடுத்தது.
தற்போது இத்தினத்தில் அதில் பாதிக்கப்பட்டவர்களைக் கவுரவிப்பதுடன், அமைதியை முன்னெடுப்பதற்காக பல்வேறு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யப்படுகிறது.