இன்று சர்வதேச ஒளி தினம்

அமெரிக்க இயற்பியலாளர் தியோடர் மைமான் 1960 மே 16ல் லேசர் ஒளிக்கற்றையை இயக்கிக்காட்டி சாதித்தார்.

இதை அங்கீகரிக்கும் விதமாக ஐ.நா., சார்பில் மே 16ல் உலக ஒளி தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இன்றைய சூழலில் அறிவியல், கலாசாரம், கலை, கல்வி, மருத்துவம், தொலைத்தொடர்பு, எரிசக்தி உட்பட பல்வேறு துறைகளில் லேசர் தொழில்நுட்பம் பயன் படுத்தப்படுகிறது.

லேசர் (சீரொளி) என்பது ஒரே அதிர்வெண் கொண்ட, ஒரே வண்ணம் கொண்ட ஒளி. இதை வெறும் கண்களால் பார்க்க முடியாது.

இது சாதாரண ஒளியைவிட பன்மடங்கு வலிமையானது. லேசர் தொழில்நுட்பம் பல துறைகளில் பயன்படுத்தப்படுகிறது.

சர்வதேச ஒளி தினம், லேசர்கள் மற்றும் ஃபைபர் ஒளியியல் போன்ற ஒளி சார்ந்த தொழில்நுட்பங்கள் குறித்த கவனத்தை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.