சிலிண்டர் உபயோகிக்கும் போது கவனிக்க வேண்டிய விஷயங்கள்…
கேஸ் அடுப்பு எப்போதும் தரை மட்டத்திலிருந்து ஏறத்தாழ இரண்டடி உயரத்திலும், சுவரை ஒட்டியும் இருக்க வேண்டும்.
சிலிண்டரை பொருத்துவதற்கு முன்பு அதன் மூடியை திறந்ததும் அதில் கசிவு வெளியேறுகிறதா என்று கவனிக்க வேண்டும்.
சோப்பு நீர் கலந்த நீரை அதன் வாய்புறம் ஊற்றினால் வாயு கசிந்தால் அதில் குமிழ் உருவானால் கசிவு இருப்பதை உணரலாம்.
சமைக்கும் போது அடுப்புக்கு அருகில் காற்று வரக்கூடிய அளவு ஜன்னல் திறந்திருந்தால் அதை தடுத்துவிடுங்கள். இதனால் சமைக்கும் போது அடுப்பு காற்றுக்கு அணைந்து அதிலிருந்து கசியும் வாயுவால் ஆபத்து உண்டாகலாம்.
அடுப்பு அருகில் வெப்பம் அதிகமான பொருள்களை வைத்திருக்க வேண்டாம். குறிப்பாக எளிதில் தீ பற்றும் பொருள்களை வைக்க வேண்டாம்.
பால் பாத்திரத்தை அடுப்பில் வைத்துவிட்டு எங்கேயும் போக வேண்டாம். இதனால் பால் பொங்கி வழிந்து அடுப்பு அணைந்து கேஸ் லீக் ஆக கூடும்.
இரவு தூங்கும் போதும் சிலிண்டரை அணைத்து விட்டு படுக்க வேண்டும். அதே போல் காலையில் முதலில் ஜன்னல் திறந்து வெளிச்சம் வந்த பிறகு அடுப்பை பற்ற வையுங்கள்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கேஸ் பைப் லைனை மாற்றுங்கள். வருடத்துக்கு ஒருமுறை அடுப்பு கேஸ் லைன் வரும் பைப் அனைத்தையும் செக் செய்யுங்கள்.
மாற்று சிலிண்டர் இணைக்கும்போது பூஜை விளக்குகள், ஊதுவத்தி அனைத்தையும் அணைத்து விட வேண்டும்.
சிலிண்டரை எப்போதும் பக்கவாட்டில் படுக்க வைக்காமல் நிற்க வைத்து உபயோகிக்க வேண்டும்.