பரம்பரையாக பய உணர்வு வருமா?

மன பதற்றம் என்பது சிறிய நோய். இதை முறையாக சிகிச்சை செய்யாமல் விட்டால், நடத்தையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

பிறவி குண கோளாறு என்ற தீவிரமான 'பர்சனாலிட்டி டிசாடர்' ஆக மாறும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

உடல் முழுக்க வலி, வாயு தொல்லை, நெஞ்சு வலி, கழுத்து வலி, தோல் அரிப்பு, எரிச்சல் என்று பலவித உடல் அறிகுறிகள் மன பதற்றத்தால் ஏற்படலாம்.

அறிகுறிகள் இருப்பின் அதை 'சைக்கோ சுமாடிக் டிசாடர்' அதாவது மன கோளாறால் ஏற்படும் உடல் உபாதைகள் என கூறப்படுகிறது.

இது, மூளையில் ஏற்படும் வேதியியல் மாற்றத்தால் சிறிய பிரச்னை. எளிதில் குணமாகக் கூடியது.

பல நோய்களுக்கு மரபணு காரணமாக இருப்பதைப் போன்று, மன பதற்றத்திற்கும் மரபணு தான் காரணம் என்பதை மருத்துவ அறிவியல் உறுதி செய்துள்ளது.

தாத்தாவுக்கு மன பதற்றம் இருந்தால், பேரனுக்கும் வரும் வாய்ப்பு உள்ளது. அதற்கடுத்த தலைமுறைக்கும் பரம்பரையாக வரலாம்.

பய உணர்வு எத்தனை பெரிய விஷயம் என்பது அந்த உணர்வு வருபவர்களுக்கு தான் தெரியும். அவர்களால் மட்டும் தான் உணர முடியும்.

மன பதற்றம், மன அழுத்தம் போன்ற பிரச்னைகளுக்கு மனநல சிறப்பு மருத்துவரை அணுகினால், சுலபமாக இவற்றை தீர்க்க முடியும்.