உடல் எடையை குறைக்க உதவும் சில டிப்ஸ்!
காலையில் எழுந்ததும் காபி, டீ குடிப்பதற்கு பதிலாக, பழங்கள், காய்கறி சூப் சாப்பிடலாம்.
காலையில் உடற்பயிற்சி செய்தால் நாள் முழுதும் சுறு சுறுப்பாக இருக்கலாம்.
குறிப்பிட்ட வயதிற்கு மேல் தசைகளை வலிமைப்படுத்துவது சிரமம். எனவே இளம் வயதில் இருந்தே உடற்பயிற்சி செய்வதை வாழ்க்கையின் ஒரு அங்கமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
இதற்கு உடற்பயிற்சியில் ஆர்வம் உள்ள நண்பர்கள் இணைந்து ஒரு குழு அமைத்து தினமும் குறிப்பிட்ட நேரத்தில் பயிற்சி செய்யலாம். இது ஒருவர் மற்றவரை ஊக்கப்படுத்த உதவும்.
மாரத்தான் குழுக்களுடன் இணைந்து முறையான பயிற்சிக்கு பின் ஓடலாம்.
சுத்திகரிக்கப்பட்ட, உணவுகள், சர்க்கரை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டியதும் அவசியம்.
யோகா உட்பட அனைத்து விதமான உடற்பயிற்சியும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.