சிறுநீரக கற்கள் பாதிப்பு... செய்ய வேண்டியதும் கூடாததும்!

சிறுநீரகத்தில் அமிலத்தன்மை, காரத்தன்மை சமநிலையின்மையால், வெளியேறாமல் அதன் பாதையை அடைத்து, படிமங்களாக படிந்து, நாளடைவில் கற்களாக உருவாகின்றன.

கல் இருப்பது உறுதியானால், முதலில் உணவில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

எதை தவிர்க்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டால், ஆபத்தில்லாமல் கற்களை வெளியேற்றிவிடலாம் என டாக்டர்கள் கூறுகின்றனர்.

கால்சியம் மாத்திரைகள் எடுத்துக்கொள்பவர்கள், சிறுநீரக கல் இருப்பது உறுதியானால், டாக்டர்கள் பரிந்துரையின் பேரில், அவற்றை தவிர்க்க வேண்டும்.

கண்டிப்பாக உணவில் உப்பு அதிகமாக சேர்த்துக் கொள்ளக்கூடாது.

எடை அதிகமாக இருப்பது கூட சிறுநீரக கற்கள் உண்டாக காரணமாக அமைகிறது.

உடல் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும். எனவே அதிக கொழுப்பு இருக்கும் உணவு சாப்பிடக்கூடாது.