பிரசவத்திற்கு பின் வரும் மன அழுத்த பிரச்னைக்கு சில தீர்வுகள்!

கர்ப்பம் ஆகும் 3 வது மாதம் முதல் பிரசவத்திற்கு பின் 6 வது மாதம் வரை ஹார்மோன் சுரப்பு மாறுபடும். இதனால் சில பெண்கள் பதட்டமாக காணப்படுவர்.

குழந்தைகளுக்கு பாலுாட்டுவது முதல் கொஞ்சுவது, தொட்டில் ஆட்டுவது வரை வேண்டா வெறுப்பாக செயல்படுவர். இதனால் தானாக புலம்புகின்றனர்.

குறிப்பாக பெண் தாய்ப்பால் ஊட்டும் போது மன அழுத்தம் ஏற்படுகிறது என்றால், டிஸ்ஃபோரிக் பால் எஜெக்ஷன் ரிஃப்ளெக்ஸ் பிரச்சினையாக இருக்கலாம்.

அவர்களுக்கு சில எளிய மனப்பயிற்சிகள் மூலம் இந்த பிரச்னையை சீராக்கலாம். பயப்பட வேண்டியதில்லை.

தினமும் உடற்பயிற்சிகள் செய்வது, மனதிற்கு அமைதி அளிக்கும். இசையை கேட்பது, யோகா, மூச்சுப் பயிற்சி மேற்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.

இந்த சமயத்தில் கணவர் ஆதரவுடன் நடந்து கொள்வது அவசியம். மேலும் பெண்கள் தோழிகளிடம் மனம் விட்டு பேச நல்ல மாற்றம் உண்டாகும்.

அவர்களுக்கு சத்தான உணவு வகைகளை டாக்டரின் ஆலோசனைப்படி அளிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பால் கொடுப்பதால் போதுமான அளவு தண்ணீர் பருக வேண்டும்.