ரயில் பயணத்தை எளிமையும், இனிமையும் ஆக்கும் முத்தான 3 செயலிகள்!

பலருக்கு ரயில்களின் நேர அட்டவணை, ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்வது ஆகியவை பற்றி தெரிவதில்லை. ரயில்வே அறிமுகப்படுத்தியுள்ள 3 செயலிகள் நமது பயணத்தை எளிமையானதாக்கும்.

Where is my train (எங்கே எனது ரயில்)... இந்த பெயரிலேயே ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் ரயில்வேயின் இச்செயலி கிடைக்கிறது. இந்திய ரயில்வேக்காக கூகுள் இச்செயலியை வடிவமைத்துள்ளது.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் உட்பட 8 மொழிகளில் இச்செயலியை பயன்படுத்தலாம். அதிவிரைவு ரயில்களுக்கு மட்டுமின்றி, புறநகர் ரயில்களைப் பற்றிய முழு தகவலும் இந்தச் செயலியில் உண்டு.

IRCTC Rail Connect (ஐ.ஆர்.சி.டி.சி., ரயில் கனக்ட்)... இந்த செயலி மூலமாக தொலைதூர ரயில்களுக்கு டிக்கெட்களை எளிதாக முன்பதிவு செய்துகொள்ளலாம்.

விமான டிக்கெட்டுகள், பஸ் டிக்கெட்டுகள், சுற்றுலாப் பேக்கேஜ், ரயில் நிலைய ஓய்வறை ஆகியவற்றையும் முன்பதிவு செய்துகொள்ளலாம். தட்கல் மற்றும் ப்ரீமியம் தட்கல் டிக்கெட்டுகள் புக் செய்வதும் எளிதானது.

UTS (யு.டி.எஸ்.,)... இது முன்பதிவில்லாத டிக்கெட்டுகள் பதிவதற்கான பிரத்யேக செயலி. இருக்கும் இடத்திலிருந்தே, செல்ல வேண்டிய இடத்திற்கான டிக்கெட்டை எடுத்துக்கொள்ளலாம்.

இந்த ஆப் ரயில் நிலையத்திலிருந்து 10 மீ., வெளியே நின்றால் தான் வேலை செய்யும். டிடிஆர் தலையைப் பார்த்தவுடன் வித்தவுட்கள் டிக்கெட் எடுத்து தப்பிக்க வாய்ப்புள்ளதால் ஜிபிஎஸ் மூலம் இந்த ஏற்பாடு.