இன்று சர்வதேச ஹீமோஃபிலியா நோய் தினம்!

ரத்தம் உறையாமை அமைப்பின் நிறுவனரான பிரான்க் ச்சானபெல்லின் ( Frank Schnabel) பிறந்த நாளான ஏப்ரல் 17ம் தேதி ஹீமோஃபிலியா நோய் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

காயம் பட்ட இடத்தில், குறைந்தது 5, 10 நிமிடத்திற்குள் ரத்தம் உறைய வேண்டும். ஹீமோபிலியா உள்ள மனிதர்களுக்கு ரத்தம் உறையும் திறன் குறைவாக இருக்கும். அல்லது உறையவே உறையாது.

காயங்கள் மற்றும் வெட்டுக்களால் அதிக ரத்தம் வெளியேறுதல் தவிர ஈறுகளில் ரத்தக் கசிவு, மூக்கிலிருந்து ரத்தம் கசிவது மற்றும் நிற்காமல் கசிவது, நீடிக்கும் மாதவிடாய் ஆகியன அறிகுறிகள்

அதனாலேயே ஒருவருக்கு ஹீமோபிலியா பாதிப்பு இருந்தால், ரத்தம் உறையாமல் உயிருக்கே ஆபத்தாக முடியும்.

ஹீமோபிலியா என்பது ரத்தம் தொடர்பான ஒருபரம்பரை நோய். அதாவது பெற்றோர்களிடமிருந்து குழந்தைகளுக்கு மரபணுக்கள் மூலமாக வருகிறது.

ஹீமோபிலியாவை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் முறையான சிகிச்சையினால் கட்டுப்படுத்த முடியும். மரபியல் காரணிகளால் ஏற்படும் பாதிப்பை ஊசி மூலம் சரி செய்யலாம்.

உடல் ரீதியான காயங்கள் ஏற்படக்கூடிய சூழல்களை முழுவதுமாக தவிர்க்க வேண்டும். குறிப்பாக விளையாட்டுகளை தவிர்க்கவும்.