சர்வதேச புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
உடலுக்கு உடற்பயிற்சி போல மனதுக்கு புத்தகம் வாசித்தல். இதை பழக்கமாக்கினால் தன்னம்பிக்கை வளரும்.
மக்களை நல்வழிப்படுத்துவதில் புத்தகம் சிறந்தவழிகாட்டி.புத்தக வாசிப்பால் கிடைக்கும் அளவற்ற மகிழ்ச்சியை குழந்தை பருவத்திலேயே ஏற்படுத்த வேண்டும்.
உலகில் வாசித்தல், பதிப்பித்தல், அறிவாற்றல் சொத்துகளை பதிப்புரிமை மூலம் பாதுகாக்கும் நோக்கில் ஐ.நா., சார்பில் ஏப்.23ல் உலக புத்தகம், பதிப்புரிமை தினம் கொண்டாடப்படுகிறது.
உலக புத்தக தினம் 1995 -ம் ஆண்டு ஏப்ரல் 23 - ந்தேதி முதன் முதலாக அறிவிக்கப்பட்டது.
இளைஞர்கள் வாசிப்பின் நேசிப்பையும், ருசியையும், இன்பத்தையும் கண்டறிய வேண்டும். அதன் மூலம் சமூக, கலாசார மற்றும் மனித நேய உணர்வை வளர்க்கலாம்.
உலக புத்தக மற்றும் காப்புரிமை தினம் கொண்டாட வேண்டும் என்பதன் வெற்றி என்பது புத்தக எழுத்தாளர்கள், வெளியீட்டாளர்கள், ஆசிரியர்களின் வெற்றியாகும்.