இன்று உலக சுகாதாரமான பணியிடம் தினம்!

உலக சுகாதாரமான பணியிடம் தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்., 28ல் கடைபிடிக்கப்படுகிறது.

விவசாயம், கட்டடம், துப்புரவு, சாலை, மின்சாரம், குடிநீர் வாரியம், சுரங்கம், அலுவலகம் உட்பட பல துறைகளிலும் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

இவ்வாறு பணியிடங்களில் அவர்களது சுகாதாரம், பாதுகாப்பை வலியுறுத்தி உலக தொழிலாளர் அமைப்பு ஏப். 28ம் தேதியை உலக பணியிட சுகாதாரம், பாதுகாப்பு தினமாக அறிவித்தது.

பணியில் உள்ள தொழிலாளர்களுக்கு ஏற்படும் விபத்து, நோய்களை தடுப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கம்.

'ஆரோக்கியமான உளவியல் சமூகப் பணிச்சூழலை உறுதி செய்வோம்.' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

இத்தினம், பணியிடத்தில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவுகிறது