இன்று சர்வதேச ஜாஸ் தினம்!
ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச ஜாஸ் தினம் ஏப்.,30ல் கொண்டாடப்படுகிறது.
2011ல் யுனெஸ்கோ (UNESCO) அமைப்பால் இந்த தினம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பொதுவாக இசை என்பது மனதை மகிழ்விப்பதுடன், உலக மக்களை ஒருங்கிணைக்கும் கருவியாகவும் செயல்படுகிறது.
உலகளவில் பல்வேறு இசை வகைகள் உள்ளன. 'ஜாஸ்' என்பது அமெரிக்காவின் பாரம்பரிய இசையாக கருதப்படுகிறது.
'ஜாஸ்' இசைக் கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக யுனெஸ்கோ சார்பில் இத்தினம் கடைபிடிக்கப்படுகிறது.
'ஜாஸ்' தினம் என்பது இசையை கொண்டாடுவது மட்டுமல்ல. உலகளவில் கல்வி, பல்வேறு கலாசாரத்தை புரிந்து கொள்வதற்கான வாய்ப்பாகவும் அமைகிறது.
இதற்காகவே 190 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த தினத்தில் இசை நிகழ்ச்சிகள் நடத்துகின்றன.