இன்று உலக கேரட் தினம்
ஆரோக்கியமான கண், சருமம், உடல் வளர்ச்சிக்கு கேரட் பயன்தருகிறது. இதில் வைட்டமின் ஏ, கே, பி6 சத்துகள் உள்ளன. கேரட்டின் பூர்வீகம் ஈரான், ஆப்கன்.
கேரட்டின் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏப். 4ல் உலக கேரட் தினம் கடைபிடிக்கப்படுகிறது.
பொதுவாக ஆரஞ்சு நிறத்தில் இருக்கும். ஊதா, கருப்பு, வெள்ளை, சிவப்பு, மஞ்சள் நிற கேரட்களும் பயிரிடப்படுகிறது.
தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றி குடல் புண்கள் வராமல் தடுக்கிறது. கொலஸ்ட்ராலை குறைக்க கூடிய நார்ச்சத்துகள் இதில் அதிகம் உள்ளது.
கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் கண் பார்வையை வலுவாக்குகிறது. வாரத்திற்கு மூன்று முறை கேரட் சாப்பிடுவதால் மாலைக்கண் நோய் வராமல் தடுக்கலாம்.
பால் பிடிக்காத குழந்தைகளுக்கு கேரட் மில்க் ஷேக் செய்து கொடுக்கலாம். இதில் கால்சியம் இருப்பதால் எலும்பு வளர்ச்சிக்கு உதவும்.