டிரெண்டிங்கிலுள்ள நாவல்பழம் சட்னி ரெசிபி இதோ
நாவல் பழம், தேங்காய், பச்சை மிளகாய், கொத்தமல்லி, சர்க்கரை, புளி, மிளகு, சீரகத் தூள், உப்பு, தண்ணீர் ஆகியவற்றை தேவையான அளவு எடுத்துக்கொள்ளவும்.
நாவல் பழங்களை உப்பு கலந்த தண்ணீரில் போட்டு நன்றாக கழுவி, அதை கத்தியால் நறுக்கி, விதையை மட்டும் அகற்றவும். தோலை நீக்கத் தேவையில்லை.
நறுக்கிய நாவல் பழம், துருவிய தேங்காய், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, புளி அல்லது எலுமிச்சை சாறு, மிளகு தூள், சீரகத் தூள் சேர்த்து மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அடிக்கவும்.
பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக சட்னி பதத்துக்கு அரைக்கவும். சுவைக்கேற்ப தேவையானளவு உப்பு சேர்க்கவும்.
கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானவுடன் கருவேப்பிலை, சீரகம், உளுந்து ஆகியவற்றை தாளித்து சட்னியுடன் சேர்த்து கிளறிவிடவும்.
இப்போது மருத்துவ குணங்கள் நிறைந்த நாவல்பழ சட்னி ரெடி. அரைக்கும்போது சிறிது வெல்லம் அல்லது சர்க்கரை சேர்த்தால் சுவை அதிகரிக்கும்.
சட்னி ஊதா நிறத்தில் இருப்பதால், குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவர். இட்லி, தோசை, தயிர்சாதம், புளிச்சாதத்துக்கு சைடு டிஷ் ஆக சாப்பிட சுவை அள்ளும்.