செக்கு எண்ணெயில் கலப்படமா? கண்டுபிடிக்க டிப்ஸ்!!

உணவுக்கு சுவை சேர்க்கும் செக்கில் ஆட்டிய சமையல் எண்ணெய் கூட, கலப்படம் காரணமாக, பல உடல் உபாதைகளை ஏற்படுத்துகிறது.

கலப்பட எண்ணெயை தொடர்ந்து பயன்படுத்துவதால், புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கலப்பட எண்ணெயை கண்டுபிடிப்பது எப்படி என பார்போம்.

சுத்தமான தேங்காய் எண்ணெய், வெப்பநிலை குறையும் போது உறைந்து விடும். பாத்திரத்தின் அடியில், கொழுப்பு போல் படியும்.

சுத்தமான தேங்காய் எண்ணெய், அதிக பிசுபிசுப்பு தன்மையுடன் இருக்கும். கலப்பட எண்ணெய் அவ்வாறு இருக்காது.

துாய நல்லெண்ணெயில், பாகுத்தன்மை அதிகளவில் இருக்கும். வாசனை மிகுந்திருக்கும்.

கலப்பட நல்லெண்ணெயை பிரிட்ஜில் வைக்கும் போது அது உறைந்து விடும். நறுமணமும் இருக்காது.

கடலை எண்ணெயை, வாசனையை கொண்டு மட்டுமே கண்டறிய முடியும். இதற்காக, மினரல் ஆயிலுடன் அதற்கான வாசனை, நிறமிகளை சேர்த்து விடுகின்றனர்.

எந்த வகை எண்ணெயாக இருந்தாலும், அதில் கலப்படம் செய்யப்பட்டிருந்தால், அதை குளிர்சாதனப்பெட்டியில் வைக்கும்போது உறைந்து விடும். இதை கண்டறிந்தால் மட்டும் போதும்.