தீபாவளி ஸ்வீட்சை செரிக்க செய்யும் லேகியம் ரெசிபி இதோ!!

லேகியம் செய்ய தேவையானவை: அரிசி திப்பிலி - 200 கிராம், கண்டதிப்பிலி - 25 கிராம், கொரகொரப்பாக அரைத்த தனியா - 100 கிராம்.

பொடித்த வெல்லம்  - அரை கிலோ, தோல் நீக்கிய மாங்காய் இஞ்சி அல்லது இஞ்சி - 100 கிராம், நெய் - கால் கிலோ, சுக்குப்பொடி - 25 கிராம், மிளகு - இரண்டு தேக்கரண்டி.

செய்முறை: அரிசி திப்பிலியை மண் போக நன்றாக தண்ணீரில் அலசி உலர்த்தி, பவுடராக்கி கொள்ளவும்.

தோல் நீக்கிய இஞ்சியை பொடியாக நறுக்கி, மிக்ஸியில் போட்டு மிளகு சேர்த்து விழுதாக அரைத்து, தனியாக வைக்கவும்.

அடி கனமான வாணலியில், பொடித்த வெல்லத்தை போட்டு, மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு மரக்கரண்டியால் கிளறி, இறக்கி, வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைக்கவும்.

பின்னர் அதனுடன் அரைத்த இஞ்சி விழுது, திப்பிலிப் பொடி, தனியா, சுக்குப்பொடி ஆகியவற்றைச் சேர்த்து நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி, கைவிடாமல் கிளறிக் கொண்டே இருக்கவும்.

கலவை நன்கு கெட்டியாகி, லேகிய பதம் வந்ததும் இறக்கி ஆற வைக்கவும். பின்னர் சுத்தமான பாட்டிலில் அடைத்து, தேவையான போது, நெல்லிக்காயளவு உருண்டையாக எடுத்து சாப்பிடவும்.