ஹெல்த்தியான முருங்கை பொடி ரெசிபி இதோ

தேவையானப் பொருட்கள்: முருங்கை கீரை - 1 கட்டு, கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன், உளுத்தம் பருப்பு - 50 கிராம்.

மிளகாய் வற்றல் - 10, மிளகு - 1 டேபிள் ஸ்பூன், பூண்டு பல் - 15, எண்ணெய், புளி, உப்பு - தேவையான அளவு.

முருங்கை கீரையை ஆய்ந்து, சுத்தம் செய்து நிழலில் உலர்த்தவும்.

எண்ணெயை சூடாக்கி, மிளகாய் வற்றல், உளுத்தம்பருப்பு, மிளகு, கொத்தமல்லி, பூண்டு பல் போட்டு சிவக்க வறுக்கவும். ஆறியபின் நன்றாக அரைக்கவும்.

அத்துடன் உலர்ந்த முருங்கை கீரை, உப்பு, புளி சேர்த்து, கொரகொரப்பாக பொடித்தால், இப்போது முருங்கை கீரைப்பொடி ரெடி.

சுவையான மற்றும் சத்துகள் நிறைந்த இந்த கீரை பொடியை சாதத்தில் நெய்யுடன் போட்டு பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.