ஆரோக்கியத்தை அள்ளித்தரும் சேப்பங்கிழங்கு!!
லேசான இனிப்பு சுவை உடன் இருக்கும் சேப்பங்கிழங்கு ஒரு கிழங்கு வகையைச் சேர்ந்தது.
இதை அறுவடை செய்த உடன் சமைத்து சாப்பிடுவதால் அரிப்பு வரலாம். அதனால் நன்கு காய வைத்து சமையலுக்குப் பயன்படுத்துவதால் அரிப்புத்தன்மை ஏற்படாது. மேலும் புளி சேர்த்துப் பயன்படுத்தவும்.
இதை வாரம் ஒரு முறை எடுத்துக்கொண்டால் வயிற்றுப்பூச்சித் தொல்லையை நீக்கும். காரணம் பூஞ்சைகள் மற்றும் பாக்டீரியாக்களுக்கு எதிராகப் போராடும் தன்மையுடையது
சேப்பங்கிழங்கில் உள்ள கிரிப்டோக்சாந்தினால் நுரையீரல் மற்றும் வாய் புற்றுநோய் வருவதை தடுக்க முடியும்.
இதில் உள்ள பீட்டா கரோட்டின், ஆன்டிஆக்சிடெண்ட் கண் பார்வையை மேம்படுத்தும். கண்புரை போன்ற பாதிப்புகளையும் தடுக்க உதவும்.
குடல் புண்கள் பாதிப்பால் அவதிப்படுவர் சேப்பங்கிழங்கை அடிக்கடி சாப்பிட்டு வர விரைவில் குணமாகும்.
இது குழந்தைகளுக்கு அரிப்பு அலர்ஜியை உண்டாக்கக்கூடும். எனவே 2 வயதுக்கு பிறகே குழந்தைகளுக்கு தரலாம்.