கார்த்திகை தீப பட்சணம் செய்ய ரெசிபி இதோ!!
அவல் பொரி உருண்டை செய்ய தேவையானவை: கெட்டி அவல் - 500 கிராம், பாகு வெல்லம் - 500 கிராம்,
நறுக்கிய தேங்காய் - கால் கப், சுக்கு பவுடர் - அரை தேக்கரண்டி, ஏலத்துாள் - ஒரு தேக்கரண்டி, தண்ணீர் -- இரண்டு கப், நெய் - சிறிதளவு.
செய்முறை: சுத்தம் செய்த அவலில், நெய்யில் வறுத்த தேங்காய், ஏலத்துாள் மற்றும் சுக்குப் பொடி சேர்க்கவும்.
கம்பிப் பதம் வந்த வெல்லப்பாகை, கலவையில் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து, கையில் நெய் தடவி உருண்டைகளாக பிடிக்கவும். அவல் பொரி உருண்டை ரெடி!
பொரி விளங்காய் உருண்டை செய்ய தேவையானவை: கடலை பருப்பு - 250 கிராம், பயத்தம் பருப்பு - 250 கிராம், வெல்லம் - 500 கிராம், ஏலத்துாள் மற்றும் நெய் - சிறிதளவு.
செய்முறை: பருப்புகளைத் தனித்தனியாக வறுத்து பொடியாக்கவும்.
இளம் வெல்ல பாகில், ஏலத்துாள் கலந்து, பொடித்த பருப்பு வகைகளை சேர்க்கவும். கையில் நெய்யைத் தொட்டு உருண்டைகளாக பிடிக்கவும்.