ஆரோக்கியமுடன் எடையை குறைக்க... சோயா ஊத்தாப்பம் டிரை பண்ணுங்க !

புரதம் விஷயத்தில் இறைச்சிக்கு மாற்றான ஒரு தாவர உணவுதான் சோயா.

ஒரு நாளுக்கு தேவையான புரதத்தில் முக்கால்வாசி 100 கிராம் சோயா துண்டுகளில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே, உடல் எடையை ஆரோக்கியமுடன் குறைக்க உதவும் சோயா ஊத்தாப்பம் ரெசிபி இதோ...

சூடான கடாயில் எண்ணெய் விட்டு, சிறிதளவு உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் ஆகியவற்றை போட்டு 1 நிமிடம் வறுக்கவும்.

அதனுடன் 1/2 கப் சோயா துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும்.

பின் தேவையானளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து வேக வைத்து, ஸ்டவ்வை அணைத்து, 10 நிமிடம் ஆற விடவும்.

சோயா கலவையில் தலா அரை கப் அரிசி மாவு, வெள்ளை ரவை, 1 கப் மோர் ஆகியவற்றை விட்டு நன்றாக கலக்கவும். பின் தண்ணீர் சேர்த்து 30 நிமிடம் ஊற விடவும்.

பின், சூடான தோசைக்கல்லில் சிறிது மாவை ஊற்றி, நறுக்கிய தக்காளி, வெங்காயம், குடைமிளகாய் போன்ற காய்கறிகள் மற்றும் கொத்தமல்லி இலைகளை தூவி வேக விடவும்.

இரு பக்கமும் நன்றாக திருப்பிப்போட்டு வேக வைத்தால், இப்போது சுவையான மற்றும் ஆரோக்கியமான சோயா ஊத்தப்பம் ரெடி.