இன்று உலக பால் தினம்

பாலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி ஐ.நா., சார்பில் ஜூன் 1ல் உலக பால் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

பாலில் உள்ள 'வைட்டமின் ஏ', நோய் எதிர்ப்பு சக்தி, நினைவாற்றலை அதிகரிக்கிறது.

இதில் உள்ள 'பி 12' வைட்டமின் நரம்பு மண்டலம் சீராக இயங்க உதவுகிறது.

குழந்தைப் பருவத்திலும் மனிதன் மூப்பு அடையும் காலங்களிலும் எலும்புகள் உறுதியாக இருக்க பாலில் உள்ள கால்சியம் உதவுகிறது.

பாலில் சோடியம் உப்புச்சத்து குறைந்த அளவே இருப்பதால் இருதயம் சம்பந்தமான நோய் தடுக்கப்படுகிறது.

பாலில் 'கொலின்' என்ற பொருள் இருப்பதால், அதனை குடித்ததும் நல்ல துாக்கம் வரும்.

பாலில் இருந்து கிடைக்கும் நெய், பெண்களுக்கு மார்பக புற்றுநோய், ஆண்களுக்கு குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.