நெல்லிக்காய் தொக்கு... ஈஸியாக செய்யலாம் !

தேவையான பொருட்கள்: நெல்லிக்காய் - 1 கிலோ, காய்ந்த மிளகாய் - 100 கிராம், வெந்தயம், கடுகு - தலா 1 தேக்கரண்டி.

மஞ்சள், பெருங்காயத்துாள் - தலா 1 தேக்கரண்டி, நல்லெண்ணெய் - 200 கிராம், உப்பு - தேவையான அளவு.

நெல்லிக்காய்களை கழுவி, ஆவியில் வேக வைத்து விதைகளை நீக்கி மையாக அரைக்கவும்.

வெந்தயம், மிளகாயை பொன்னிறமாக வறுத்து பொடியாக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி சூடானவுடன், கடுகு, பெருங்காயத்துாள் போட்டு, நெல்லிக்காய் விழுதைக் கொட்டவும்.

அதனுடன், மிளகாய், வெந்தயப்பொடி, மஞ்சள் துாள், உப்பு சேர்த்து வதக்கி இறக்கினால், நெல்லிக்காய் தொக்கு இப்போது ரெடி.

இட்லி, தோசை, சப்பாத்தி, தயிர் சாதத்துக்கு 'சைடு டிஷ்' ஆக தொட்டுக் கொள்ளலாம்; சத்துகள் நிறைந்தது.