அதிமதுரத்தின் அற்புத பலன்களை அறிவோமா…
அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும், பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் சிறப்பாக செயல்படுகிறது
ஊட்டச் சத்தாகவும், ரத்தப் போக்கை கட்டுப் படுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்தி செய்யவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும், கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.
அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து, வறுத்து, சூரணம் செய்து வைத்து, 5 கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட்டால், அதிகச் சூட்டால் ஏற்படும் இருமல் தீரும்.
அதிமதுரம் மற்றும் தேவதாரம், தலா, 35 கிராம் எடுத்து, வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன், இரண்டு முறை கொடுத்தால், சுகப்பிரசவம் ஏற்படும்.
அதிமதுரச் சூரணம், சந்தனச் சூரணம், தலா, 0.5 கிராம் எடுத்து, பாலில் கந்து, நான்கு வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் ரத்தம் வருதல் நிற்கும். உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.
போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள், அதிமதுரச் சூரணம் - 1 கிராம் எடுத்து, பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், அதிகமாகச் சுரக்கும்.
அதிமதுரத்தை நன்றாக அரைத்து, பசும்பாலில் கலந்து தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். முடி உதிர்தல் இருக்காது.