எடையைக் குறைக்கும் ஏபிசி ஜூஸ்! நன்மைகளும் ஏராளம்!
ஆப்பிள், பீட்ரூட் , கேரட் ஆகியவற்றை நன்றாகக் கழுவி தோல் நீக்கி மிக்ஸியில் அரைத்து ஜூஸ் ஆக எடுத்துக்கொள்ளவும். அவ்வளவுதான் புத்துணர்ச்சி தரும் ஏபிசி ஜூஸ் தயார்.
வைட்டமின்களில் ஏ , பி1, பி2, பி3, பி6, பி9, சி, ஈ, கே, மற்றும் இரும்பு, துத்தநாகம், மக்னீஷியம், பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ், செலினியம் என அனைத்து சத்துகள் நிறைந்த அமிர்தமாக இது இருக்கிறது.
உடம்பில் புற்றுநோய் உருவாகும் செல்களின் வளர்ச்சியை தடுக்கவும், புற்றுநோயிலிருந்து விடுபடவும் பெரிதும் உதவுவதாக கூறப்படுகிறது.
இந்த ஜூஸில் கேரட் இருப்பதால் கண் எரிச்சல், வலி மற்றும் பார்வைத் திறன் குறைபாடு போன்ற பாதிப்பிலிருந்து கண்களை பாதுகாக்க உதவுகிறது.
அல்சரால் ஏற்படும் குடல் புண்ணையும், வயிற்று புண்ணையும் குணப்படுத்த இந்த ஏபிசி ஜூஸ் பயன்படுகிறது. மேலும் சிறுகுடல், பெருங்குடல், சிறுநீரகம் சார்ந்த நோய்கள் வராமல் பாதுகாக்கும்.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த ஜூஸை அருந்தலாம். உடலில் உள்ள கழிவுகளை அகற்றி உங்கள் எடையை விரைவாக குறைப்பதற்கு இந்த ஏபிசி பானம் உதவும்.
முகத்தில் இருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை சரிசெய்யும். சருமத்தை பாதுகாத்து வயது முதிர்வையும் தடுக்கும்.