குழந்தைகளை கவரும் 'ஜெல்லி' நிறைந்த பேஷன் புரூட்!
வித விதமான பழங்களை விரும்பும் குழந்தைகளுக்கு பேஷன் புரூட் மிகவும் பிடிக்கும்.
சுவையும், இனிப்பு மற்றும் புளிப்பு கலந்துள்ளதால் குழந்தைகளை மிகவும் கவரும்.
இந்த பழம் ஒரு பழைமையான ஒரு வகை, தமிழில் இதை கொடித்தோடை என்று அழைப்பர்.
அதன் உள்ளே ஜெல்லி போல் சதைப்பகுதி இருக்கும் . மேலும் அதன் கொட்டையும் மொறு மொறு என்று இருக்கும்.
பேஷன் பழத்தில் நார்ச்சத்து அதிக அளவு உள்ளது. அது உங்கள் குடலை ஆரோக்கியமாக வைக்கிறது.
கொலஸ்ட்ரால், நீரிழிவு, இதய நோய் போன்ற பாதிப்பிலிருந்து உங்களை பாதுக்காக்கும்.
பேஷன் பழம் உங்கள் உடலுக்கு தேவையான கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் ஆகியவற்றைக் கொடுக்கிறது.
உங்கள் சிறுநீரகங்கள், நரம்புகள், தசைகள் மற்றும் இதயம் என அனைத்து உறுப்புகளை பாதுகாக்கிறது.
இந்த பழத்தை நீங்கள் அப்படியே சாப்பிடலாம். இருந்தாலும், புரூட் மிக்ஸ் காக்டெயில் ஜூஸ், தயிர் கலந்த ஸ்மூத்தி என இதை கொண்டு உங்களுக்கு பிடித்த ஒரு பானத்தை தயார் செய்யலாம்.