உருளைக்கிழங்கு முறுக்கு ரெசிபி
தேவையான பொருட்கள்: அரிசி மாவு - 1 கப், உருளைக்கிழங்கு - 1,
மிளகாய் துாள், வெண்ணெய், எண்ணெய் - தேவையான அளவு, சீரகம், வெள்ளை எள், பெருங்காய துாள், உப்பு, தண்ணீர் - சிறிதளவு.
உருளைக்கிழங்கை வேக வைத்து, தோல் நீக்கி துருவவும்.
அதில், அரிசி மாவு, மிளகாய்த் துாள், வெள்ளை எள், பெருங்காய துாள், சீரகம், வெண்ணெய், உப்பு, தண்ணீர் சேர்த்து பிசையவும்.
பாத்திரத்தில் எண்ணெய் கொதித்ததும், பிசைந்த மாவை, தேன் குழல் அச்சில் இட்டு முறுக்காக பிழிந்து, நன்கு வேக விட்டு எடுக்கவும்.
இப்போது மொறுமொறுப்பான, உருளைக்கிழங்கு முறுக்கு ரெடி. அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடுவர்.