வெயிலுக்கு குளிர்ச்சி தரும் நுங்கு ஜூஸ்
நுங்கு - 5, இளநீர் - 1 டம்ளர், நன்னாரி சிரப் - 2 டேபிள் ஸ்பூன், தேவையானளவு சர்க்கரை.
முதலில் நுங்குத் தோலை முழுவதுமாக உரித்துக் கொள்ளவும்.
பின், மிக்சியில் நுங்குடன் நன்னாரி சிரப் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
இளநீரில் பாதியளவு மட்டும் சேர்த்து மீண்டும் நன்றாக அரைத்து எடுக்கவும்.
இந்த கலவையை மீதமுள்ள இளநீருடன் சேர்த்து கலக்கினால், பிரெஷ்ஷான மற்றும் சுவையான நுங்கு ஜூஸ் ரெடி.
பிரிட்ஜ்ஜில் சிறிது நேரம் வைத்தும் குழந்தைகளுக்கு 'சில்'லென தரலாம். கூடுதல் சுவைக்கு சிறிதளவு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.