மழைக்காலத்தில் வெங்காயத்தை பாதுகாக்க சில டிப்ஸ்!
சமையலில் தினமும் வெங்காயம் கட்டாயம் என்பதால் அதிகளவில் அவற்றை வாங்கி சேமிக்க வேண்டியுள்ளது. ஆனால் மழைக்காலத்தில் வெங்காயம் எளிதில் அழுகக்கூடும்.
இதனால் அவற்றை பாதுகாப்பாக வைத்திருக்க விரும்பினால் வாங்கியவுடன் நல்ல வெங்காயத்தை முதலில் தனியே வைக்கவும். ஈரமாக உள்ள வெங்காயத்தை சுத்தம் செய்து வைக்க வேண்டும்.
அருகில் மற்ற காய்கனிகளை வைக்ககூடாது. குறிப்பாக உருளைக்கிழங்கோடு சேர்த்து வைக்க வேண்டாம். இவை வெங்காயத்தை எளிதாக அழுகச்செய்யும்.
குளிர்ச்சி மற்றும் ஈரமான சூழல் வெங்காயத்தை எளிதாக கெட்டுப்போகச் செய்யும். பூஞ்சை படியவும் வாய்ப்புள்ளது. எனவே வெங்காயத்தைக் காற்றோட்டமான இடத்தில் வைப்பது சிறந்தது.
மேலும் வெங்காயத்தை பிளாஸ்டிக் பைகளில் போட்டு வைக்கக்கூடாது. அதை தவிர்த்து அதற்கு பதிலாகத் துளையுள்ள கூடை அல்லது காற்றோட்டமுள்ள கன்டெய்னரில் வைக்கலாம்.
குளிர்சாதனப் பெட்டியில் கூட உரித்த வெங்காயத்தை உலர்ந்த இடத்தில் தான் வைக்க வேண்டும். மேலும் விரைவில் பயன்படுத்த வேண்டும். அதில் வைப்பதை தவிர்ப்பதே நல்லது.
வெங்காயத்தை 15 நாள்களுக்கு ஒரு முறையாவது சுத்தம் செய்து வேறு இடத்திற்கு மாற்றி வைக்கவும். மழைக்காலத்தில் தேவைக்குஏற்ப வாங்குவதே மிகவும் சிறந்தது.