கல்லீரல் பணியை எளிமையாக்கும் உணவுகள் சில!
மூளைக்கு குளூக்கோஸ் தருவதில் துவங்கி, பிரதான நுண்ணுாட்டச் சத்துக்களை சேமித்து வைப்பது, நோய் தொற்றுக்கு எதிராக போராடுவது என்று 200க்கும் மேற்பட்ட பணிகளை கல்லீரல் செய்கிறது.
உணவு, நீர், காற்றின் வழியே உடலுக்குள் செல்லும் நச்சுப் பொருட்களை வெளியேற்றி, உடலை சமநிலையில் வைத்திருப்பது கல்லீரலின் பணி. அந்த பணியை விரைவாக்கும் சில உணவுகள் இதோ..
எலுமிச்சை சாற்றை உணவுக்கு முன் குடித்தால், வயிற்றின் அமிலச் சுரப்பை அதிகப்படுத்தி, செரிமான சக்தியை அதிகரிக்கும்.
சிறந்த மூலிகைகளில் ஒன்றான பூண்டு, கல்லீரலை சுத்தப்படுத்துவதோடு கொழுப்பைக் கட்டுப்படுத்தவும், உயர் ரத்த அழுத்தத்தை தடுக்கவும் உதவும்.
பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட், பீட்ரூட் காய்கறிகளை தினமும் உணவில் சேர்க்க வேண்டும்.
நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தினமும் சாப்பிடுவதால், கழிவுகளை வெளியேற்ற உதவும்.
தினமும் காபி குடிப்பதால், கல்லீரலில் கொழுப்பு படிவதைத் தடுக்கும் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன.