பிள்ளையாருக்குப் படைக்க இனிப்புக் கொழுக்கட்டை...!
விநாயகர் சதுர்த்தி என்றாலே விதவிதமான கொழுக்கட்டைதான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். இனிப்பு பிடிக் கொழுக்கட்டையை செய்யும் வழிமுறையைப் பார்க்கலாம்.
மிதமான தணலில் அரிசி மாவை நன்றாக வறுத்து தனியே வைக்கவும். கடாயில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி வெல்லத்தை சேர்த்து கரைந்தவுடன் வடிகட்டி தனியே வைக்கவும்.
கடாயில் 2 டீஸ்பூன் நெய் ஊற்றி உருகியவுடன், தேங்காய், எள், ஏலக்காய் பொடி ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறவும்.
ஒரு கடாயில் வெல்லக் கரைசலை ஊற்றி, ஒரு ஸ்பூன் நெய், தேங்காய், எள் கலவையை சேர்த்து கிளறவும். பின், அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து கைவிடாமல் ஓரிரு நிமிடங்களுக்கு கிளறவும்.
தயாரான மாவை கைகளால் பிசைந்து ஒரே உருண்டையாக உருட்டி வைக்கவும். அதில், சிறு சிறு உருண்டைகளாக எடுத்து கைகளால் அழுத்திப் பிடிக்கவும்.
பிடித்த கொழுக்கட்டைகளை இட்லி பாத்திர தட்டில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைக்கவும். இப்போது, சூப்பரான, தித்திப்பான இனிப்பு பிடிக் கொழுக்கட்டை ரெடி.