உடல் எடையை குறைக்க உதவும் ஹெல்த்தியான வெஜ் சாண்ட்விச்
'எனக்கு உடற்பயிற்சி செய்ய நேரமே இல்லை. ஆனால் விதவிதமாக சாப்பிட வேண்டும்; அதேவேளையில் உடல் எடையும் அதிகரிக்கக்கூடாது' என்பதே இன்று பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
உடல் எடையை குறைக்க உதவும், ஆரோக்கியமான வெஜ் சாண்ட்விச் செய்யும் வழிமுறையை பார்க்கலாம்.
சிறிது இஞ்சி, வெங்காயம், கொத்தமல்லி இலையுடன், சீரகத்தூள், சாட் மசாலாத்தூள், எலுமிச்சை சாறு, வேர்க்கடலை, உப்பு, உலர்ந்த மாங்காய்ப் பொடியை சேர்த்து கிரீன் சட்னி தயாரிக்கவும். .
வேகவைத்த பச்சைப்பயறு மற்றும் பொடிப்பொடியாக நறுக்கிய தக்காளியுடன், குருமிளகுத்தூள், உலர்ந்த மாங்காய் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு ஸ்பூனால் நன்றாக அழுத்தி மசிக்கவும்.
இதனுடன் சிறிது நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், துருவிய கேரட், 2 ஸ்பூன் கிரீன் சட்னியை சேர்த்து நன்றாக கலக்கவும். இப்போது வெஜிடபிள் சாண்ட்விச் மிக்ஸ் ரெடி.
ஒரு ரொட்டித்துண்டை எடுத்து ஒரு பக்கத்தில், கிரீன் சட்னியை தடவி, சாண்ட்விச் மிக்ஸால் நிரப்பவும். இதன் மீது, மற்றொரு ரொட்டித்துண்டை எடுத்து கிரீன் சட்னியை தடவி மூடவும்.
தோசைக்கல்லில் சிறிது எண்ணெயை ஊற்றி எள்ளை தூவவும்; பின்னர், தயாரித்த பிரெட் துண்டுகளை சுடவும். மேல்பகுதியிலும் எள்ளைத் தூவி, திருப்பிப் போட்டு, அழுத்திவிட்டு எடுக்க வேண்டும்.
காலை பிரேக் பாஸ்ட் ஆகவோ அல்லது இரவு டின்னராகவோ சாப்பிட ஏற்றது இந்த, சுவையான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் சாண்ட்விச்.