நெல்லிக்காய் சாப்பிட்டவுடன் தண்ணீர் குடித்தால் ஏன் இனிக்கிறது?
வைட்டமின் சி சத்து அதிகம் நிறைந்த இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட நெல்லிக்காய் புளிப்புச் சுவை கொண்டது. சிறுவயதில் பலரும் இதை உப்பு, காரம் தொட்டு சாப்பிட்டிருப்போம்.
உடலுக்குத் தேவையான பல சத்துகள் அடங்கிய நெல்லிக்காயை அனைத்து வயதினரும் சாப்பிடலாம்.
நெல்லிக்காய் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடித்தால் நாவில் திடீரென இனிப்புச் சுவை உண்டாகும். இந்த சுவை மாறுபாடு ஏன் ஏற்படுகிறது என தெரிந்து கொள்ளலாம்.
நெல்லிக்காயைச் சாப்பிடும்போது, நம் நாக்கில் அதன் ப்ரோட்டான்கள் ஒட்டிக்கொள்ளும்; பின், தண்ணீர் குடிக்கும்போது அவை உணவுக் குழாய்க்கு அடித்துச் செல்லப்படும்.
மற்ற பழங்களைப் போலவே நெல்லிக்காயில் கார்போஹைட்ரேட், புரதம், சிட்ரிக் அமிலம் உள்ளிட்டவை சிறிய அளவில் அமைந்துள்ளது.
எச்சிலில் உள்ள சலைவரி ஆம்லேஸ் என்கிற நொதி, நெல்லிக்காயின் ப்ரோட்டானுடன் கலக்கும்போது அதிலுள்ள ஸ்டார்ச்-ஐ உடைத்து மால்டோஸ் (சர்க்கரை) ஆக மாற்றுகிறது.
இதனால் நெல்லிக்காய் சாப்பிட்ட பின் எச்சில் அதிகம் ஊறும்போதும், தண்ணீர் குடிக்கும்போதும் இனிப்புச் சுவை உண்டாகிறது.