உப்பில் அயோடின் இருப்பதை வீட்டிலும் சோதிக்கலாம்...

உப்பில் அயோடின் கலப்பை உறுதிசெய்வதற்காக, ஆண்டு தோறும் மாதிரிகள் வீடுகள், கடைகள், உணவகங்களில் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.

தேசிய அயோடின் குறைபாடுகள் தடுப்பு திட்டத்தின் கீழ், 2024-25ம் ஆண்டில் மாநிலத்தில் மொத்தம், 8,702 உப்பு மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

ஆய்வு முடிவுகளின் படி, 97 சதவீத உப்பு மாதிரிகளில், 15க்கு பி.பி.எம்., அளவுக்கு மேல் அயோடின் அளவு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அயோடின் உடலுக்கு தேவையான தாதுச்சத்து, தைராய்டு ஹார்மோன்களின் மிகவும் அவசியமானது. குறைவதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன.

இதன் காரணமாக, இந்தியாவில் அயோடின் இல்லாத உப்பு விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது.

அயோடின் அளவு ஒரு கிலோ உப்பில், 15 மில்லிகிராம் அளவு அயோடின் இருக்க வேண்டும். இதை விட குறைவாக இருந்தால், அயோடின் போதுமான அளவு இல்லை என்பது பொருள்.

பொதுமக்கள் எளிதாக வீடுகளிலேயே பரிசோதனை செய்யலாம். உருளைக்கிழங்கு மேல் உப்பை வைத்து அதன் மேல் இரண்டு சொட்டு எலுமிச்சை பழச்சாறு ஊற்றினால், நீல நிறமாக மாறும்.

அவ்வாறு மாறினால் அயோடின் சத்து இருக்கிறது என்று பொருள். கல் உப்பாக இருந்தாலும் அயோடின் சேர்த்து தான் விற்பனை செய்யவேண்டும்.