உடல் சூட்டை தணிக்க உதவும் கீரைகள்!

கோடையில் உடல் உஷ்ணத்தை தவிர்க்க, மிக எளிமையான வழி, கீரை வகைகளில், 'சூப்' துவையல், மசியல் செய்து உணவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.

புதினாவை தினமும் உணவில் புதினாவை சேர்த்து கொள்வதால், கோடையில் ஏற்படும் செரிமான கோளாறு மற்றும் மலம் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சலை குணமாக்கும்.

வெந்தயக் கீரையின் குளிர்ச்சி தன்மை, உடல் சூட்டை குறைத்து, குளிர்ச்சியை கொடுக்கும். கபம், சளி உள்ளவர்கள் வெந்தயக் கீரை சாப்பிட்டால், விரைவாக குணமாகும்.

லெட்யூஸ் கீரை நீர்ச்சத்து மற்றும் சத்து நிறைந்தது, லெட்யூஸ் கீரை. கோடை காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைபாட்டை சரி செய்ய உதவுகிறது.

பசலைக் கீரை செரிமான பிரச்னைகள் முதல், உடல் எடையை குறைக்கும் தன்மை வரை, பசலைக் கீரை சரி செய்கிறது.

கறிவேப்பிலையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் சர்க்கரை நோய், கொலஸ்ட்ரால், வயிற்று புண் ஆகியவை சரியாகும்.

கொத்தமல்லி உண்பது மன அழுத்தத்தைக் குறைக்கவும், வாய் துர்நாற்றத்தை போக்கவும், வயிறு உப்புசம் இல்லாமல் இருக்கவும் உதவுகிறது.