குளிர்கால உணவுகள்... பூண்டு சட்னி !

தேவையானப் பொருட்கள்: பூண்டு பற்கள் - ஒரு கப், சின்ன வெங்காயம் - கால் கப், காய்ந்த மிளகாய் - எட்டு.

கடுகு - கால் டீஸ்பூன், உளுத்தம் பருப்பு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, புளி - சிறிதளவு, உப்பு, நல்லெண்ணெய் - தேவையான அளவு.

பூண்டுடன், வெங்காயம், காய்ந்த மிளகாய், புளி, கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளிக்கவும்.

இதனுடன் அரைத்த விழுது, உப்பு சேர்த்து சுருள கிளறி இறக்கினால், பூண்டு சட்னி ரெடி.

சூடான இட்லி அல்லது தோசையுடன் பரிமாறினால், சுவை அள்ளும்.