இந்த ஓணத்துக்கு... சாப்பிட்டு பாருங்கள் சத்யா உணவு!
சத்ய கழிஞ்ஞோ? ஓணம் பண்டிகையன்று பிற்பகலில், ஒவ்வொரு மலையாளியும் பரஸ்பரம் கேட்டுக் கொள்ளும் கேள்வி இது. ஓண விருந்து சாப்பிட்டு விட்டீர்களா என்பது, இதன் பொருள்.
இந்த சைவ விருந்தில் குறைந்தபட்சம், 26 வகையான உணவுகள் பரிமாறப்படும்.
அவை ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வகையான ஆரோக்கிய குணங்கள் உண்டு.
நீண்ட தலை வாழை இலையில் குடும்பமாக அமர்ந்து, சத்ய விருந்து உட்கொள்வர்.
ஆறு சுவைகளிலும் வகை, வகையான உணவுகள் இடம்பெற்றிருக்கும்.
கொஞ்சம் சோறுடன் வாழைப்பழம், அப்பளம், உப்பு, எலுமிச்சை ஊறுகாய், மாங்காய் தொக்கு, நேந்திரம் சிப்ஸ், இஞ்சிப்புளி, இஞ்சிக் கிச்சடி, முட்டைக்கோஸ் தோரன்
கூட்டுக்கறி, கேரட் பீன்ஸ் மெழுகுப்பரத்தி, அவியல், ஓலன், எரிசேரி, சாதம், பருப்புக்கறி - நெய், சாம்பார், ரசம், மோர் கறி
தக்காளி பச்சடி, காளான், சம்பரம், நாரங்கா கறி, உப்பேரி, பருப்பு பிரதமன், பாலடை பிரதமன்...இப்படி இலையை அலங்கரிக்கும் பட்டியல் நீளும்.
இதுவரை சத்ய சாப்பிடாதவர்கள், இந்த முறை கண்டிப்பாக டேஸ்ட் பண்ணுங்க!