நீரிழிவு பாதித்தோருக்கு பாதாம் பால் காபி, சோயா பால் டீ!
பசும் பாலில், 'லேக்டோஸ்' எனப்படும் சர்க்கரை, புரதம் மற்றும் கொழுப்பு குறைவாகவும், எருமை பாலில் இவை சற்று அதிகமாகவும் இருக்கும்.
பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு, 'லேக்டோஸ்' உடலுக்குள் சென்றதும், அது குளூக்கோசாக மாறி, ரத்தத்தில் உறிஞ்சப்படுகிறது.
இதனால், சர்க்கரையின் அளவு 20 - -30 சதவீதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
கொழுப்பு சத்து அதிகமாக இருக்கும் எருமை பாலை குடித்தால், இதய நோயாளிகளுக்கு பிரச்னை ஏற்படும்.
நம் நாட்டில் மாட்டுப் பாலுக்கு மாற்றாக ஆட்டுப் பால் தவிர வேறு இரண்டு பால்கள் உள்ளன. அவை பாதாம் பால், சோயா பால் என உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்..
இவற்றில் எந்தவித சர்க்கரையும் இல்லை; புரதம், தாது உப்புகள் உள்ளன; சுவையிலும் பெரிய வித்தியாசம் தெரியாது.
பாதாம் பால் காபி, வழக்கமான காபி சுவையிலும்; சோயா பால் டீ, வழக்கமான டீ சுவையிலும் இருக்கும் என கூறப்படுகிறது.